100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற பார்வைத்திறன் குறையுடையோர் பள்ளி

100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற பார்வைத்திறன் குறையுடையோர் பள்ளி

தஞ்சாவூரில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக பார்வை திறன் குறைபாடு உடையோருக்கான அரசு பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று வருகிறது.


தஞ்சாவூரில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக பார்வை திறன் குறைபாடு உடையோருக்கான அரசு பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று வருகிறது.
தஞ்சாவூரில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக 100 விழுக்காடு தேர்ச்சியை பெற்று வருகிறது பார்வை திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளி. தஞ்சாவூர் மேம்பாலம் அருகே, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தின் கீழ், பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் முதல் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நிகழாண்டு ப்ளஸ் 2 தேர்வு எழுதிய 25 மாணவர்கள், 5 மாணவிகள் என 30 பேரும் தேர்ச்சி பெற்று 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 ஆண்டுகளாக 100 விழுக்காடு தேர்ச்சியை பெற்று வருகிறது. இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியர் செ.மாணிக்கராஜ் கூறியதாவது: எங்களது பள்ளியில் பார்வைத் திறன் குறைபாடு உடையவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு பிரெய்லி எழுத்து மூலம் தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், பொருளியல், கம்ப்யூட்டர் அப்ளிகேசன் ஆகிய பாடங்கள் நடத்தப்படுகிறது. ஆசிரியர்களின் உதவியோடு மாணவர்கள் தேர்வுகளை எழுதுகின்றனர். இந்தாண்டு தேர்வு எழுதிய 30 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். எங்களது பள்ளி தொடர்ந்து 8 ஆண்டுகளாக ப்ளஸ் 2 தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சியை பெற்று வருகிறது" என்றார்.

Tags

Next Story