பள்ளி நுழைவாயில் பணி - ஆட்சியர், எம்.எல்.ஏ ஆய்வு

ஆய்வு


பெரம்பலூர் அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் பள்ளி நுழைவாயில் பணியை மாவட்ட ஆட்சியர் கற்பகம், எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் , இயங்கி வரும் அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி க்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டு வரும் பள்ளியின் நுழைவாயில் பணியை மாவட்ட ஆட்சித் கற்பகம், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் பார்வையிட்டனர்.பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியின் போது பொதுபணி துறை அதிகாரிகள் திமுக நிர்வாகிகள். பலர் உடன் இருந்தனர்.
Next Story



