தொடர் மழைக்குப் பிறகு பள்ளி திறப்பு - எம்.எல்.ஏ திடீர் ஆய்வு

தொடர் மழைக்குப் பிறகு பள்ளி திறப்பு - எம்.எல்.ஏ திடீர் ஆய்வு
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழைக்குப் பிறகு பள்ளி திறப்பு: எம்எல்ஏ திடீர் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழைக்குப் பிறகு பள்ளி திறப்பு: எம்எல்ஏ திடீர் ஆய்வு
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட நிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. இந்த புயல் காலங்களில் மாணவ மாணவிகளின் நலன் கருதி பள்ளி கல்லூரிகள் 4 மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டு, அதன் பிறகு மெல்ல மெல்ல நீர் வெளியேற்றளண செய்யப்பட்டு பள்ளி, கல்லூரிகள் இன்று மாவட்டம் முழுவதும் முழுமையாக திறக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சின்ன காஞ்சிபுரம் பி.எம்.எஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட எம் எல் ஏ எழிலரசன், பள்ளி வளாகம், குடிநீர் தொட்டி, கழிவறைகள் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பில் எக்காரணம் கொண்டும் சமரசம் மேற்கொள்ளக் கூடாது என தலைமை ஆசிரியர் உள்ளிட்டோருக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் , செந்தில் முருகன், பொறியாளர் கணேசன், மாமன்ற உறுப்பினர் சந்துரு, கமல், சுகாதார குழு தலைவர் சங்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story