நாமக்கல்: பள்ளி மாணவர்கள் உற்சாகம்!

நாமக்கல்: பள்ளி மாணவர்கள் உற்சாகம்!
பள்ளி திறக்கப்பட்டு கல்வி ஆண்டு தொடங்கியுள்ளதால் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பள்ளி வகுப்பறைகள், பள்ளி வளாகங்கள் தூய்மை செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன. இதனை அடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன.பள்ளி திறக்கப்பட்டு கல்வி ஆண்டு தொடங்கியுள்ளதால் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.முதல் நாள் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து பள்ளிகளுக்கு விட்டுச் சென்றனர்.

கோடை விடுமுறை சந்தோஷமாக கழித்த மாணவர்கள் பள்ளி வாசலை தொட்டதுமே பரவசம் ஆனார்கள். தங்களது நண்பர்களை பார்த்து ஆனந்தம் அடைந்தனர். ஆசிரியர்களை பார்த்து உற்சாகத்துடன் வணக்கத்தை தெரிவித்தனர். அவர்களிடம் ஆசிரியர்கள் நலம் விசாரித்தனர்.

.

Tags

Read MoreRead Less
Next Story