பள்ளி மாணவனுக்கு சாதனையாளருக்கான விருது

பள்ளி மாணவனுக்கு சாதனையாளருக்கான விருது

சேலத்தில் பள்ளி மாணவனுக்கு ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பினர் சாதனையாளருக்கான விருது வழங்கினர்.


சேலத்தில் பள்ளி மாணவனுக்கு ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பினர் சாதனையாளருக்கான விருது வழங்கினர்.
சேலம் 5 ரோடு வெண்ணங்குடி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த என்.சரவணன்- எம்.அருள்மொழி தம்பதியின் மகன் எஸ்.மோனிஷ். இவர், சென்னை செங்கல்பட்டு விகாஸ் மந்திரா பப்ளிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். மோனீஷ், கராத்தே, அபாகஸ், ஓவியம், மாரத்தான், ஸ்கேட்டிங், ரூபிக்ஸ் க்யூப், நடனம் என பல்துறைகளிலும் சிறந்து விளங்கியதுடன், அதற்காக ஏராளமான பரிசுகளும், கோப்பைகளையும் பெற்று சாதனை படைத்துள்ளார். எனவே அவரது சாதனைகளை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் சிறந்த இளம் சாதனையாளருக்கான விருதை ‘ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு’ என்ற அமைப்பு வழங்கி கவுரவித்துள்ளது. இந்த விருதை அந்த அமைப்பின் நிர்வாக அதிகாரி ஜேக்கப் ஞானசெல்வன்- எஸ்தர் ஆகியோர் வழங்கினர். இந்த விருது வழங்கும் விழா மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடந்தது. விருது பெற்ற மோனிஷை, உறவினர்கள் பூ.மகாலிங்கம், என்.பச்சையம்மாள், எம்.கலா, ‘ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு’ சேலம் நிர்வாகி பிரியா மற்றும் பெற்ேறார், உறவினர்கள், பள்ளி நிர்வாகிகள் உள்பட பலர் பாராட்டினர். மாணவன் மோனிஷ் வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடந்த கவிதை போட்டி, லோகோ உருவாக்கும் போட்டியில் வெற்றி பெற்று பரிசு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story