பள்ளி மாணவ தொழில் முனைவோர் சந்தை - ஆட்சியர் ஆய்வு
ஆட்சியரிடம் விளக்கும் மாணவி
நாகப்பட்டினம் நகராட்சி அரசுப் பள்ளி மாணவர்களின் தொழில்முனைவோர் சந்தையை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டார்.
நாகப்பட்டினம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி மாணவர்களின் தொழில்முனைவோர் சந்தையானது மாணவர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்கவும் மற்றும் அவர்களின் தொழில்திறனை மேம்படுத்தவும் நடத்தப்படுகிறது. இன்று நடைபெற்ற மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் சந்தையில் இருதய நோய் பற்றிய விழிப்புணர்வு, விளையாட்டு பொருள்கள் கடை, கைவினைப் பொருள்கள் கடை, உணவு கடைகள், சிலை அலங்காரம் கடை, மெஹந்தி கடை, மகளிர் சுய உதவிக்குழு கடை, பசுமை பொருள்கள் கடை உள்ளிட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்த சந்தையை மாணவர்களே குழுக்களாக பிரிந்து நடத்துகின்றனர். சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த இச்சந்தையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு வெகுவாக பாராட்டினார். பின்னர் மாணவ, மாணவிகளுடன் மதிய உணவு அருந்தினார். இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் தஜெகதீசன். கமியூனிட்டி இம்பாக்ட் பெலோ ஆகாஷ் மற்றும் அரசு அலுவலர்கள் மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.
Next Story