சரக்கு ஆட்டோ மோதி பள்ளி மாணவன் பலி

சரக்கு  ஆட்டோ மோதி பள்ளி மாணவன் பலி
X

பைல் படம் 

தூத்துக்குடியில் லோடு ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகன் சஞ்சய் (14) 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று இரவு தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஸ்பிக் நகரில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பஸ் நிறுத்தம் அருகே எதிரே வந்த லோடு ஆட்டோ மீது பலமாக மோதி ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிர் இழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story