பிளஸ் 2 மாணவி மாயம்

பிளஸ் 2 மாணவி மாயம்
மாணவி மாயம் 
ஆரணி அருகே 17 வயது பிளஸ் டூ மாணவி மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 12ம் தேதி வேலுாரிலுள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் உறவினர் வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து விசாரித்தபோது அவர் இன்ஸ்டாகிராமில் கோவையை சேர்ந்த வாலிபருடன் பழகி வந்தது தெரிந்தது.சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வாலிபரை தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story