பள்ளி மாணவன் தற்கொலை - தூத்துக்குடியில் சோகம்

X
பைல் படம்
தூத்துக்குடியில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரனி மேற்கு காமராஜர் நகரை சேர்ந்தவர் சரவணகுமார் மனைவி செல்வராணி. இவரது 4வது மகன் புதியவன் (14), டேவிஸ்புரம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், பள்ளியில் மாணவர்களுக்கு ஏற்பட்ட தகராறில் புதியவனிடம் அவரது பெற்றோரை அழைத்து வரும்படி தலைமை ஆசிரியர் கூறினாராம்.
இதற்கிடையே நேற்று மாலை வீட்டிற்குச் சென்ற மாணவன் புதியவன், தாய் தன்னை திட்டுவாரே என்ற பயத்தில் வீட்டுக்குள் சென்றதும் படுக்க அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஆதாம் அலி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
