பள்ளி மாணவர் கைப்பந்து போட்டி - ஆட்சியர் துவக்கி வைப்பு

பள்ளி மாணவர்  கைப்பந்து போட்டி - ஆட்சியர் துவக்கி வைப்பு
X

 கைப்பந்து போட்டியை துவக்கி வைத்த ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அப்புனீஸ் கைப்பந்து குழு மற்றும் திருப்பத்தூர் மாவட்ட கைப்பந்து மேம்பாட்டு கழக சார்பில் திருப்பத்தூர் மாவட்ட அளவில் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு இடையான கைப்பந்து சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இதில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 20 குழுக்களும். மாணவிகள் 10 குழுக்களும் கலந்து கொண்டுள்ளனர். அப்புனீஸ் குழு செகரட்டரியும் இந்தியன் வாலிபால் பிளேயர் கோச்சுமான வெங்கடேசன் தலைமையில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. மேலும் இந்த கைப்பந்து போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது. கைப்பந்து குழுவின் சார்பில் பல்வேறு கைப்பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல வீரர்களை உருவாக்கும் நோக்கிலும் இந்த அப்புனீஸ் கைப்பந்து குழுவினர் செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் உதவி சார் ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் அப்புனீஸ் கைப்பந்து குழுவினர் என பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story