பள்ளி மாணவர்கள் மோதல்: போலீஸ் விசாரணை
மாணவர்கள் தாக்குதல்
குடியாத்தம் அருகே பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நடுப்பேட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் ஒரு மாணவருக்கும், அதேப் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவருக்கும் இடையே கடந்தசில நாட்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மாலை பள்ளி முடிந்தவுடன் பள்ளியை விட்டு வெளியே வந்த பிளஸ்-2 மாணவரை, பிளஸ்-1 மாணவர் சிலருடன் சேர்ந்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
அதை மாணவரின் தாய், பாட்டி ஆகியோர் தடுக்க சென்றுள்ளனர். அவர்களை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் காயமடைந்த மாணவர் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story