சாலை விதிகள் குறித்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

சாலை விதிகள் குறித்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம் 

ராமநாதபுரம் பரமக்குடியில் சாலை விதிகள் குறித்த பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
பரமக்குடியில் சாலை விதிகள் குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியார் பள்ளி சார்பில் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் பத்மப்பிரியா தொடங்கி வைத்தார். ஹெல்மெட் அணிந்து டூவீலர் ஓட்ட வேண்டும், சீட் பெல்ட் அணிந்து வாகனங்கள் இயக்க வேண்டும், மது அருந்தி வாகனம் ஓட்டக் கூடாது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பள்ளி மாணவர்கள் பரமக்குடி நகர் முழுவதும் விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபட்டனர். சாலை விதிகளை மீறி செயல்படும் போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் செயல்முறை விளக்கம் அளிததனர். ஏராளமான மாணவ, மாணவிகள் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஊர்வலமாக சென்றது அனைவரின் பாராட்டை பெற்றது.

Tags

Next Story