பள்ளி மாணவர்கள் உண்டியலில் சேமிக்கும் பழக்கம் தொடக்கம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்கள் உண்டியலில் சேமிக்கும் பழக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்கள் உண்டியலில் சேமிக்கும் பழக்கம் தொடங்கப்பட்டுள்ளது.நாகை கலெக்டர் ஜானி டாம் வர்கிஸ் பெருமிதம் நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 16 முதல் 26 வரை நாகப்பட்டினம் அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் நாகை சங்கமம் 3-ஆவது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.
இவ்விழாவில் கலந்துகொள்ள உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் உண்டியலில் பணம் சேமிக்கும் பழக்கம் வரவேண்டும். அவ்வாறு சேமிக்கப்படும் தொகையினை புத்தகத் திருவிழா நடைபெறும் போது புத்தகங்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு பள்ளி மாணவர்கள் உண்டியலில் பணம் சேமிக்க முன்வரவேண்டுமென கடந்த மாதம் முதல் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உண்டியலில் பணம் சேர்க்கும் பழக்கத்தினை தொடங்கி விட்டார்கள், இதை போல் மற்ற அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு உண்டியல் மூலம் பணம் சேமிக்கும் பழக்கத்தினை பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியரிகள் ஊக்கவிக்கவேண்டும் 61601 மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்