பொங்கல் விழாவில் புழுதி பறக்க குத்தாட்டம் போட்ட பள்ளி மாணவர்கள்

காணியாலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த கலைநிகழ்ச்சிகளில் மாணவர்கள் நடனமாடி அசத்தினர்.
காணியாலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த கலைநிகழ்ச்சிகளில் மாணவர்கள் நடனமாடி அசத்தினர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் உள்ள காணியாலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது. பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது. பொங்கல் விழாவின் நிறைவில் பள்ளி மாணவ-மாணவியர் இசைக்கப்பட்ட தமிழ் திரைப்பட பாடலுக்கு ஏற்றவாறு அசைவுகள் அமைத்து நடனம் ஆடினர். நிகழ்ச்சியின் நிறைவுக்கு சென்றபோது, மாணாக்கர்கள் உற்சாகத்தில் புழுதி பறப்பது கூட தெரியாமல் குத்தாட்டம் போட்டு பொங்கல் விழாவை கொண்டாடினர்.
Next Story