கள்ளக்காதலை கைவிட கணவர் மறுத்ததால் பள்ளி ஆசிரியை தற்கொலை

கள்ளக்காதலை கைவிட கணவர் மறுத்ததால் பள்ளி ஆசிரியை தற்கொலை

தற்கொலை 

உடுமலையில் கள்ளக்காதலை கைவிட கணவர் மறுத்ததால் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த குரல்குட்டை கிராமத்திற்குட்பட்ட முருகன் மில் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது55). இவரது மனைவி முத்துலட்சுமி (38).இவர் உடுமலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் முத்துலட்சுமிக்கு நரம்பு சம்பந்தமான நோய் இருந்துள்ளது. இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனாலும் அவருக்கு நோய் குணமாகாததால் மன வேதனையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி ரங்கநாதன் தனது மகன் ராஜேசுடன் கோவிலுக்கு சென்று விட்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது முத்துலட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ரங்கநாதன் உடுமலை போலிசில் புகார் செய்தார். அதன்பேரில் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முத்துலட்சுமியின் தற்கொலைக்கு காரணம் என்னவென்று போலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் முத்துலட்சுமியின் சகோதரி தேவிக்கும் (44), ரங்கநாதனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். இந்த விபரம் முத்துலட்சுமிக்கு தெரியவரவே தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். ஆனால் ரங்கநாதனும், தேவியும் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த முத்துலட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதை தொடர்ந்து முத்துலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு மாற்றம் செய்யப்பட்டு ரங்கநாதன், தேவி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story