பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை

X
பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருச்சி, ராஜராஜன் நகரைச் சோ்ந்தவா் ஸ்டீபன் சந்தனராஜ். இவரது மனைவி அமுதா சோபியா (49), திருச்சி பொன்மலை பகுதி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை. பணிச்சுமையால் மன உளைச்சலில் இருந்த இவா்அதற்கான மருத்துவ சிகிச்சையும் எடுத்து வந்தாராம். இந்நிலையில் வியாழக்கிழமை அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக அவரது கணவா் அளித்த தகவலின் பேரில், கே.கே. நகா் போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Next Story
