மல்லூர் வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளியில் "அறிவியல் தினம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மல்லூர் வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளியில் பிப்ரவரி 28"உலக அறிவியல் தினம்" சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மல்லூர் வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளியில் பிப்ரவரி 28"உலக அறிவியல் தினம்" சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அறிவியலறிஞர்கள் போல உடையணிந்து வந்த மாணவர்கள்,நம் அன்றாட வாழ்வில் அறிவியலின் தேவை குறித்து உரையாற்றினர். அறிவியல் கண்காட்சிக்கு மாணவர்களால் தயாரிக்கப்பட்ட அறிவியல் சார்ந்த உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் சமூகசேவை புரியும் பணியாளர்கள் போல வேடமணிந்து வந்து அவர்களின் மகத்தான சேவை குறித்து விளக்கினர். இந்நிகழ்ச்சிகளில் பள்ளியின் முதன்மைச் செயல் அலுவலர் திருநாவுக்கரசு,நிர்வாக அலுவலர் வினோத்குமார் மற்றும் பள்ளி முதல்வர் கணேஷ் ஆகியோர் பங்கேற்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைப் பாராட்டினர்.

Tags

Next Story