செஞ்சி ராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

செஞ்சி ராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
X
அறிவியல் கண்காட்சி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த களையூர் நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள ராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதற்கு கல்வி குழும தலைவர் செஞ்சி பாபு தலைமை தாங்கி, கண்காட்சியை தொடங்கி வைத்தர். செயலாளர் அய்யப்பன், பொருளாளர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பாலிடெக்னிக் முதல்வர் கார்த்திகேயன், பள்ளி முதல் வர்கள் முரளி, அருள்முருகன் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு பல்வேறு வகையான படைப்புகளை கண்காட்சி யில் இடம்பெற செய்திருந்தனர், கண்காட்சியை மாணவர்கள், பெற்றோர்கள் பார்வையிட்டனர். சிறப்பான படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்த மாணவ, மாண விகளுக்கு பதக்கமும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டன.

Tags

Next Story