தஞ்சாவூர், மருதுபாண்டியர் கல்லூரியில் அறிவியல் பயிற்சி பட்டறை
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் அறிவியல் பயிற்சி பட்டறை நடைபெற்றது
தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, அறிவியல் புலம் சார்பாக, 'அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அண்மைக்கால போக்குகள்' என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மா.விஜயா, துணை முதல்வர் இரா.தங்கராசு முன்னிலை வகித்தனர்.
இயற்பியல் துறைத்தலைவர் பி.சரவணன், கணினி அறிவியல் துறைத்தலைவர் ஏ.தனசேகர் வாழ்த்திப் பேசினர். சிறப்பு விருந்தினராக அவிநாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவர் ஏ.பாலமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, முதுநிலை இயற்பியல் துறை இரண்டாமாண்டு மாணவி வி.சந்தியா தர்ஷினி வரவேற்றார். நிறைவாக கணிதத்துறை இளநிலை மூன்றாமாண்டு மாணவி உமா நன்றி கூறினார். ஏற்பாடுகளை அறிவியல் புலம் சார்ந்த பேராசிரியர்கள், கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.