பாபநாசத்தில் சுட்டெரிக்கும் வெயில்
. பாபநாசத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால் பகல் நேரத்தில் மனிதர்கள் நடமாட்டம் குறைந்துவிட்டது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியது. முதல் வெயிலின் தாக்கம் மிக கொடுமையாக உள்ளது. ஏப்ரல் முதல் மே மாதம் வரையில் நாடு முழுவதும் கடுமையாக வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கடந்த நாட்களில் பாபநாசம் பகுதியில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அழையா விருந்தாளியாக போன்று காலை 7 மணிக்கு எல்லாம் வெயில் வந்து விடுகிறது. நேரம் செல்ல செல்ல வெயில் உக்கிரம் எடுக்க தொடங்கி விடுகிறது நேற்று பாபநாசத்தில் 106 டிகிரி வெயில் சுட்டெரித்தது. வெயில் காலத்தையும் பொறுட்படுத்தாமல் அன்றாடம் உழைக்கும் கூலி தொழிலாளர்கள் . விவசாய தொழிலாளர் கூட இந்த ஆண்டு அடிக்கும் வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றார்கள். என்றால் வெயிலின் உக்கிரத்தை சொல்வதற்கு வார்த்தைகளே கிடையாது. அந்த அளவுக்கு வெயில் உடலில் பட்டாலே ஊசி குத்துவதை போன்று உள்ளது.
இதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கிறார்கள் அலுவலக பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்காக செல்பவர்கள் மட்டும் வேறு வழியின்றி பகல் நேரங்களில் வெளியில் சென்று வருகிறார்கள் இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது சாலைகள் அனைத்தும் பகல் நேரத்தில் வெறிச்சோடி காணப்படுகிறது. காலை 8 மணிக்குள்ளும் மாலை 4 மணிக்கு மேலாக பின்னருமே சாலைகளில் மக்கள் நடமாடத்தை பார்க்க முடிகிறது. வெயிலில் கொடுமையில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக இளநீர் நுங்கு வெள்ளரி தர்பூசணி மற்றும் பழங்களை சாப்பிட்டு வருகிறார்கள். மேலும் பதநீர் சர்பத் பழசாறுகள் குளிர்பானங்கள் குடித்தும் வெயில் கொடுமையில் இருந்து விடுபட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டுகளில் மே மாதங்களில் தான் நீர்நிலைகளில் தண்ணீர் வறண்டு போனது. ஆனால் இந்த ஆண்டு தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் முன்னதாகவே நீர் நிலைகள் வறண்டு விட்டன. பகலில் வெயில் கொடுமை என்றால் இரவிலோ வெப்பத்தால் ஏற்படும் வெக்கையின் காரணமாக தூங்க முடியாமல் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மின்விசிறியை போட்டால் அதிலிருந்து குளிர்ந்த காற்று வருவதற்கு பதிலாக வெப்ப காற்று தான் வருகிறது என புலம்பும் மக்கள் இந்த வெயில் கொடுமையில் இருந்து விடுவிக்க வர்ண பகவான் கருணை காட்டுவாரா?என்று எதிர்பார்த்து உள்ளனர்.