தஞ்சையில் வேட்பாளர்கள் தேர்தல் செலவினக் கணக்குகள் ஆய்வு
மாவட்ட ஆட்சியர்
தஞ்சையில் வேட்பாளர்கள் தேர்தல் செலவினக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்
நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலை (2024) முன்னிட்டு, மன்னார்குடி, திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கிய, தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவின கணக்குகளை,
ஏப்.01, 10, 17 ஆகிய தினங்களில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு செய்யவுள்ளார். இதன் முதற்கட்ட ஆய்வானது எதிர்வரும் 01.04.2024 அன்று காலை 11 மணியளவில் தஞ்சாவூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அறை எண் 1 (தரைத்தளம்)-இல் தேர்தல் செலவின பார்வையாளர் தலைமையில்,
வேட்பாளர்களால் தாக்கல் செய்யப்படவுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
Next Story