தேர்தல் செலவின நடைமுறைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

தேர்தல் செலவின நடைமுறைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் செலவின நடைமுறைகள், கண்காணிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. 

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் செலவின நடைமுறைகள், கண்காணிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி தேர்தல் செலவின நடைமுறைகள் மற்றும் கண்காணிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாநில அளவிலான சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர் .பி.ஆர்.பாலகிருஷ்ணன், தலைமையில், திருவாரூர் தேர்தல் செலவின பார்வையாளர் வருண்சோனி, நாகப்பட்டினம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜானி டாம் வர்கீஸ், திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ,ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

2024 ஆம் ஆண்டு மக்களலை பொதுத்தேர்தலுக்கு தமிழ்நாட்டிற்கு மாநில அளவிலான சிறப்பு தேர்தல் செலவின் பார்வையாளராக (Special Expenditure Observer) திரு.பி.ஆர்.பாலகிருஷ்ணன், இ.வ.ப., (IT) (ஓய்வு) இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது மாநிலம் முழுவதும் தேர்தல் செலவின நடைமுறைகள் மற்றும் கண்காணிப்பு தொடர்பான ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதனை முன்னிட்டு இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் செலவின நடைமுறைகள் மற்றும் கண்காணிப்பு தொடர்பான தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து ஆய்வு மேற்கொண்டார்.

வேட்பாளர்களின் தேர்தல் செலவின நடைமுறைகள் மற்றும் கண்காணிப்பு தொடர்பான செயல்பாடுகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகளின்படி கண்காணிக்கவும், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்புக் குழுவினர் முழு ஈடுபாட்டுடன் செயல்படவும், வங்கி பணப்பரிவர்த்தனைகளை அவ்வப்போது மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வருமானவரித் துறையினரிடம் பகிர்ந்து கொண்டு ஒத்துழைப்பை நல்கிடவும், வருமானவரித் துறையினரிடமிருந்து அவ்வப்போது கிடைக்கப் பெறும் தகவலினை மாவட்ட அளவிலான வருமானவரித் துறையினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும் போன்ற பல்வேறு தேர்தல் நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் தேர்தல் செலவின கண்காணிப்பு குழுவின் வருமான வரித்துறை சார்ந்த மற்றும் மத்திய/மாநில கலால்துறை சார்ந்த தொடர்பு அலுவலர்கள், உதவி ஆணையர் கலால், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது). மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கணக்கு அலுவலர் மற்றும் அனைத்து பொறுப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story