நிலத்தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு
அரிவாளால் வெட்டு
மாரண்டஅள்ளி அருகே நிலத்தகராறில் விவசாயிக்கு அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்ட மன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாரண்டஅள்ளி அடுத்த நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் , விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் சரவணகுமார் தனது விவசாய நிலத்தில் டிராக்டரில் உழுது கொண்டிருந்தார்.
அப்போது அங்கு அரிவாளுடன் வந்த ரமேஷ் நிலத்தை உழக்கூடாது என கூறி டிராக்டர் டயரை வெட்டி பஞ்சராக்கினார், மேலும் சரவணகுமாரின் தலை, கை கால் பகுதியில் வெட்டிவிட்டு தப்பி சென்றார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சரவணகுமாரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து நேற்று மாலை கொடுத்த புகாரின்பேரில் மாரண்டஅள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரமேஷை தேடி வருகின்றனர்.
Next Story