பட்டப்பகலில் அரிவாள் வெட்டு - இருவருக்கு போலீசார் வலை

பெரம்பலூரில் முன்விரோதம் காரணமாக பட்ட பகலில் 2 பேரை அரிவாளால் வெட்டியவர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் எலி என்கிற வெங்கடேசன் வயது -20 இவர் தற்பொழுது ஆலம்பாடி சமத்துவபுரத்தில் வசித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்கிற மார்க்கெட் சிவா வயது18, மற்றும் சங்குப்பேட்டையை சேர்ந்த தாஸ் என்கிற தசரதன் வயது -19 என்பவர்களுக்கும் இடையே பிப்ரவரி 10ம் தேதி மதியம் - 1 மணி அளவில் ஆத்தூர் சாலையில் உள்ள மூடப்பட்ட ஒயின்ஷாப் அருகே தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது,

அப்போது அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து இவர்களை அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் மாலை 4 மணியளவில் பெரம்பலூர் -ஆத்தூர் சாலையில் நிர்மலா நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த எலி என்கிற வெங்கடேசனை இருசக்கர வாகனத்தில் வந்த, தாஸ் மற்றும் மார்க்கெட் சிவா ஆகிய இருவரும் கத்தி மற்றும் அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் தலை கை மற்றும் கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டதில் நிலை தடுமாறி கீழே விழுந்த எலி வெங்கடேசன் வலியால் துடித்துக் கொண்டிருந்த போது அவரது நண்பர் திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர், தற்பொழுது பெரம்பலூர் ரோவர் வளைவு பகுதியில் குடியிருந்து வரும் அப்துல்அஜிஸ் வயது 26, என்பவர் தடுக்க முயன்றுள்ளார்.

அப்போது அவரை தலையில் வெட்டிய மார்க்கெட் சிவா மற்றும் தசரதன் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எலி வெங்கடேசன் மற்றும் அப்துல் அஜீஸ் ஆகிய இருவரையும் பெரம்பலூர் நகர போலீசார், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மார்க்கெட் சிவா மற்றும் தசரதன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ட பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story