பூதப்பாண்டியில் நடந்து சென்ற வாலிபருக்கு அரிவாள் வெட்டு
பூதப்பாண்டியில் நடந்த சென்ற வாலிபரை அரிவாளால் வெட்டியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள காட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் (32). இவரை நேற்று மாலை திட்டுவிளையை அடுத்துள்ள மணத்திட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரு வாலிபர்கள் ஆல்பர்ட்டினுடைய கை மற்றும் கால் பகுதியில் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்கள். ஆல்பர்ட் கூச்சலிடவே அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்கள்.அருகில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்சிற்க்கு தகவல் கொடுத்து சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சாலை ஓரத்தில் ஒருவரை இரண்டு வாலிபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story