சிஏஏ சட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு சமீபத்தில் நாடு முழுவதும் CAA சட்டத்தை அமுல்படுத்தி நடைமுறைக்கு வந்ததாக அறிவித்தது. இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே எஸ்டிபிஐ கட்சியினர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்த சிஏஏ சட்டத்தால் மக்களை பிளவுப்படுத்தும் செயல் என்பதால் , மத்திய அரசு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் . எஸ்டிபிஐ கட்சியின் மாட்ட தலைவர் முகமது லுக்மானுல் ஹீக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த மெழுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
Next Story