SDPI கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்
SDPI கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு பெரம்பலூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷாஜஹான் அவர்கள் வரவேற்புரை வழங்க,மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது பாரூக், மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது அபுதாஹிர், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அப்துல் கனிஆகியோர் முன்னிலை வகிக்க, தலைமையுரை மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் வழங்கினார்கள்.. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் அபூபக்கர் சித்திக், அஸ்கர் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நூர் முஹம்மது,முஹம்மது அலி, குன்னம் தொகுதி தலைவர் அப்துல் முத்தலிப், பெரம்பலூர் தொகுதி துணைத்தலைவர் ஜியாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். 1) செப்டம்பர் 13 திருச்சியில் நடைபெறும் SDPI கட்சியின் 234 தொகுதிகளுக்குமான நிர்வாகிகள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிப்பது. 2) செப்டம்பர் 18 பெரம்பலூர் வருகை தரும் சிறுபான்மை ஆணைய அதிகாரிகளை சந்தித்து சமூகத்தின் மிக முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்துவது. 3) பெரம்பலூர் நகர் முழுவதும் தண்ணீர் குழாய் பதிக்க சாலை தோண்டப்பட்டு சரிவர மூடாமலும், தண்ணீர் குழாய் சில இடங்களில் போடாமலும் அப்படியே பாதியில் கிடக்கிறது.. இதனால் மழைபெய்யும் போது அந்த சகதியில் வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்படுகிறது. உடனடியாக அந்த வேலைகளை விரைந்து முடிக்கவும் இந்த செயற்குழு வாயிலாக கேட்டு கொள்ளப்படுகிறது.
Next Story



