SDPI கட்சியின் சார்பில் 79 வது சுதந்திர தின கொடியேற்றம் மற்றும் மரக்கன்று வழங்கினர்.
வி_களத்தூர் SDPI கட்சியின் சார்பில் 79 வது சுதந்திர தின கொடியேற்றம் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி வி.களத்தூர் பஞ்சாயத்து கமிட்டி செயலாளர் முஹம்மது தலைமையில் நடைபெற்றது. வி.களத்தூர் கிளைத் தலைவர் பக்கீர் முஹம்மது தேசிய கொடியை ஏற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் நூர் முஹம்மது சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக ஜமாத் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். SDPI கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது பாரூக், வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் முஹம்மது இக்பால், பஞ்சாயத்து கமிட்டி தலைவர் இஸ்மாயில், மில்லத் நகர் கிளை செயலாளர் முஜிபுர் ரஹ்மான், செயல்வீரர்கள் குதுப்தீன், முஹம்மது அலி, சையது உசேன், ஹாஜா சரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னோர்களின் தியாகங்களால் பெற்ற சுதந்திர தேசத்தையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் பாதுகாக்க உறுதியேற்போம்.
Next Story




