SDPI கட்சியின் தேசிய தலைவர் M.K. ஃபைஜி அவர்களை கைது செய்த அமலாக்கத்துறையை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
SDPI கட்சியின் தேசிய தலைவர் M.K. ஃபைஜி அவர்களை கைது செய்த அமலாக்கத்துறையை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட SDPI கட்சி சார்பில் இன்று மாலை 4.30 மணி அளவில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. SDPI கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் A. முஹம்மது ரபீக் தலை மைதாங்கினார். பெரம்பலூர் நகர நிர்வாகி சேக் தாவுது வரவேற்றார். SDPI மாவட்ட பொது செயலாளர் செய்யது அபுதாஹிர், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் காமராஜ், SDPI தொகுதி தலைவர் முஹம்மது ரபீக் ஆகியோர் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணை தலைவர் மு. முஹம்மது பாரூக், மாவட்ட செயலாளர் அஸ்கர் அலி, மாவட்ட பொருளாளர் முகையதீன் பாரூக், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாஜஹான் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பு பொது செயலாளர் அப்துல் கனி நன்றியுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட, தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Next Story




