பஞ்சாயத்து தலைவரிடம் எஸ்டிபிஐ கட்சியினர் மனு

பஞ்சாயத்து தலைவரிடம் எஸ்டிபிஐ கட்சியினர்  மனு

எஸ்டிபிஐ மனு 

நெல்லை மாவட்டம் தாழையூத்து பஞ்சாயத்து கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சி மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாழை சிராஜ் மற்றும் தாழை உசேன் கலந்து கொண்டு பஞ்சாயத்து தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் தாழையூத்து பகுதியில் இமானுவேல் நகர், மீராள் நகர், குடியிருப்பு பகுதியில் எட்டு தெருக்களில் 80 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர், அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு,சாலை வசதிகள் இல்லாமல் அவதிபடுகின்றனர், தெருவிளக்கு இல்லாததால் காட்டு விலங்குகள் நடமாட்டம் உள்ளது.திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவசர ஆம்புலன்ஸ் செல்ல சாலை இல்லாத நிலை, குடிநீர் வசதி இன்றி தவிக்கும் நிலை உள்ளது. ஆகவே அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோரிக்கை மனு அளித்தனர். எஸ்டிபிஐ கிளை நிர்வாகிகள் மற்றும் பகுதி மக்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story