தேர்தல் ஆணையத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்

தேர்தல் ஆணையத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட எஸ் டி பி ஐ கட்சியினர்

இராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசிய அவதூறு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து 200க்கும் மேற்பட்ட எஸ் டி பி ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மக்களிடையே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசினார். தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்திய தேர்தல் ஆணையம், உரிய நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வருகின்றது.

ஆகவே, தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பிரதமர் மோடி பதவி விலகக் கோரியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 200 க்கும் மேற்பட்டவர்கள் பேரணியாகச் சென்று சென்னையில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இவர்களை காவல்துறையினர் சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது ஒரு சிலர் மட்டும் சாலை மறியல் ஈடுபட்டனர் பின்னர் அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அழைத்துச் சென்றனர் இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story