திருச்செந்தூரில் கடல் சீற்றம் - 3 பெண்கள் காயம்
பைல் படம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். இதனால், கடலிலும் பக்தா்கள் கூட்டம் அதிகமிருந்தது. திருச்செந்தூரில் நேற்று காலை முதலே கடல் அலை சீற்றம் அதிகமாக இருந்தது. மதியம் சுமார் 10 அடி உயரத்துக்கும் அதிகமாக ராட்சத அலைகள் எழும்பின.
சென்னையைச் சோ்ந்த ரூபினி (65), கோவையைச் சோ்ந்த துளசி (50) ஆகியோா் கடலில் நீராடியபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவா்களை கடற்கரைப் பாதுகாப்புப் பணியாளா்கள் சிவராஜா, சுதாகா், சரவணன், ராமா், இசக்கிமுத்து உள்ளிட்டோா் மீட்டு திருச்செந்தூா் கோயில் மருத்துவ மையத்தில் முதலுதவிக்கு அனுப்பினர். பின்னர், இருவரும் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல, காலில் காயம் ஏற்பட்டு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட பொள்ளாச்சியைச் சோ்ந்த வசந்தாமணி (65) என்பவரையும் கடற்கரைப் பாதுகாப்புப் பணியாளா்கள் மீட்டனர்.