தனியார் சேகோ ஆலைக்கு ‘சீல்’
தனியார் சேகோ ஆலைக்கு ‘சீல்
கெங்கவல்லி அருகே உணவு பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தக்கூடாத ரசாயனம் கலந்ததால் தனியார் சேகோ ஆலைக்கு சீல்.
கெங்கவல்லி:கெங்கவல்லி சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தலைவாசல் ரசாயனம் பயன்படுத்தியதால், தனியார் சேகோ ஆலைக்கு, அதிகாரிகள், 'சீல்' வைத்தனர். சேலம் மாவட்டம் தலை வாசல் அருகே சித்தேரியில், கணேசன், 50, என்பவருக்கு சேகோ ஆலை உள்ளது. அங்கு சேலம் சேகோ சர்வ் மேலாண் இயக்குனர் லலித் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை, மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது உணவு பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தக்கூடாத, சோடியம் ஹைபோ குளோரைடு, 3 கேன்களில் இருந்தது. ரசாயனம் கலப்பதற்கு வைத்திருந்த, ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு மில்க், ஈர ஸ்டார்ச் மாவு,மக்காச்சோளம், ஹைப்போ கெமிக்கல் என, 19.76 லட்சம் ரூபாய் மதிப்பில் ஜவ்வரிசி, ஸ்டார்ச்சை பறிமுதல் செய்து அங்கேயே வைத்தனர். தொடர்ந்து அப்பொருட்களில் இருந்து உணவு மாதிரிகளை சேகரித்து, அதன்ஆய்வுக்கூடம் அனுப்பிவைத்தனர். தற்காலிக உரிமம் ரத்து செய்யப்பட்டு, ஆலைக்கு நேற்று, 'சீல்' வைத்தனர்.
Next Story