குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்.
திருத்தணி பாரதியார் தெரு பகுதியில் உள்ள ஒரு கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இ
தையடுத்து, நேற்று திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜாமுகமது, திருத்தணி போலீஸ் எஸ்.ஐ., ராக்கிகுமாரி மற்றும் போலீசார், கடையில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது கடைக்கு உணவு பாதுகாப்பு சான்று இல்லை, சுகாதாரம் இல்லை, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை,
ஹான்ஸ் போன்ற குட்கா பொருட்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர் போன்றவை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்தனர். குட்கா பொருட்கள், பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் செல்வராஜ், 33 என்பவருக்கு, 6,000 ரூபாய் அபராதம் விதித்து வழக்கு பதியப்பட்டது. கடையை பூட்டி சீல் வைக்கப்பட்டது.