குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்
தர்மபுரியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
தர்மபுரி நகரில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது. இதையடுத்து, உத்தரவின் பேரில், தர்மபுரி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் மற்றும் டவுன் போலீசார் எஸ்வி ரோடு, பஸ் நிலையங்கள், சீனிவாசராவ் தெரு, மஜீத் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அங்கிருந்த 500 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சம்மந்தப்பட்ட கடையை, உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளும், போலீசாரும் பூட்டி சீல் வைத்தனர். கடை உரிமையாளருக்கு 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
Next Story