ஆலைக்கு சீல்
ஆலைக்கு சீல்
திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளம் பகுதியில் குடிநீர் தயாரிப்பு ஆலை முறையாக உரிமம் இல்லாததால் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிகுளம் பகுதியில் குடிநீர் தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தொழில் உரிமம் முறையாக பெறாததாலும் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில் வரி கட்டாததாலும் பேரூராட்சி நிர்வாக அலுவலர் பூத பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் ஆலைக்கு நேற்று சீல் வைத்தனர்.
Next Story