மாநகராட்சிக்கு சொந்தமான 4 கடைகளுக்கு சீல்
சீல்
அண்ணா வணிக வளாகப் பகுதியில் வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு, உதவி வருவாய் அலுவலா் விஜயராகவன் தலைமையிலான அலுவலா்கள் சீல் வைத்தனா்.
திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட பேருந்து நிலைய கடைகள், அண்ணா வணிக வளாகம், பூ சந்தை, மேற்கு ரதவீதி, கோட்டைக்குளம், பேகம்பூா் உள்ளிட்ட பகுதியிலுள்ள கடைகள், ஆண்டு குத்தகை இனங்கள் மூலம் மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வாடகைப் பணம் ரூ.6 கோடி வரை நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன், குறைந்தபட்சம் 60 சதவீத வரி நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், மாநகராட்சி கடைகள் மூலம் கிடைக்க வேண்டிய ரூ.6 கோடியை வசூலிக்க வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு உதவி வருவாய் அலுவலா் விஜயராகவன் தலைமையிலான அலுவலா்கள் சீல் வைத்தனா்.
Tags
Next Story