சங்ககிரியில் கடைகளுக்கு சீல் - உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை
சங்ககிரியில் கடைகளுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை
சங்ககிரியில் கடைகளுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் உத்தரவின்படி, சங்ககிரி ஆர்எஸ் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சங்ககிரி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கண்ணன் போலீசாருடன் சென்று சோதனை நடத்தினார். அப்போது பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கணேசன் என்பவருக்கு சொந்தமான கடையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர். அதனையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் கண்ணன் அவற்றை பறிமுதல் செய்து கடை உரிமையாளருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து, கடையை பூட்டி சீல் வைத்தார். மேலும், எபினேசர் காலனியில் உள்ள ஒரு கடையில் புகையிலை விற்பனை கண்டறிந்து கடையை பூட்டி சீல் வைத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Tags
Next Story