புகையிலை விற்பனை செய்த கடைக்கு சீல்
திருவட்டாறு அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருவட்டார் வட்டாரத்தில் உள்ள கடைகள் பலவற்றில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்துக்கு பலரும் புகார் அனுப்பி வந்தனர் மேலும் கல்லூரி, பள்ளிகள் இயங்கும் பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலைப்பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்கபப்டுகிறதா என அவ்வப்போது உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் திருவட்டார் வட்டார உணவுபாதுகாப்பு அலுவலர் நாகராஜன் காட்டாத்துறை அருகே கல்லுவிளையில் உள்ள செய்தங்கம் என்பவரது கடையை சோதனையிட்ட போது அங்கு மறைத்து வைத்திருந்த 19 .5 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கட்டுகளை கைப்பற்றினர்.பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை நாகர்கோவில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரது உத்தரவின் பேரில் திருவட்டார் உணவு பாதுகாப்பு அலுவலர் நாகராஜன் மற்றும் திருவட்டார் போலீசாருடன் கடைக்கு சென்று கடைக்கு சீல் வைத்தனர்