புகையிலை விற்ற கடைகளுக்கு சீல் வைப்பு

புகையிலை விற்ற கடைகளுக்கு சீல்  வைப்பு

புகையிலை விற்ற கடைகளுக்கு சீல் வைப்பு

தென்காசி மாவட்டம், சிவகிரியில் புகையிலை விற்ற கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி பேரூராட்சி அலுவலர் வெங்கடா கோபு, உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் போலீசார், பணியாளர்கள் நேற்று அந்த பகுதி உள்ள கடைகளில் சோதனை செய்தனர், அப்போது இருளாண்டி மற்றும் காளை பாண்டியன் ஆகியோர் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இரண்டு கடைகளையும் சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Tags

Next Story