விராலிமலையில் சீமான் வாக்கு சேகரிப்பு!

விராலிமலையில் சீமான் வாக்கு சேகரிப்பு!

சீமான் வாக்கு சேகரிப்பு

நாம் தமிழர் கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார்.
கரூர் மக்களவைத் தொகுதியின் கீழ் வரும் விராலிமலை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட விராலிமலை சோதனைச்சாவடி பகுதியில் வேட்பாளர் கருப்பையா என்பவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். இதில் பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி மட்டுமே போட்டியிடும் நிலையில் மக்களுடன் கூட்டணி அமைத்து தனியாகப் போட்டுயிடுகின்றது. என்ற சீமான் திரைப்படப் பாடல்கள் பாடி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திடீரெனக் கூட்டத்துக்குள் புகுந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் நாம் தமிழர் கட்சி தொண்டர்களை சமாதானப்படுத்தி காரை பத்திரமாக அனுப்பிவைத்தனர். இதனால் 10 நிமிடங்கள் கூட்டம் தடைபட்டு மீண்டும் தொடங்கியது. இதையடுத்து, பேச்சைத் தொடர்ந்த சீமான் இடையிடையே பாட்டு பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

Tags

Read MoreRead Less
Next Story