ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவரை தேடும் பணி தீவிரம்

ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவரை தேடும் பணி தீவிரம்
ஆற்றில் மாயமான மாணவரை இன்று காலை முதலே தேடும் பணி நடக்கிறது.
திருவட்டாறு அருவிக்கரை ஆற்றில் மூழ்கிய மாணவரை தேடும் பணி இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்டம்திருவட்டாறு அருவிக்கரை ஆற்றில் மூழ்கிய மாணவரை தேடும் பணி இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பகுதி உள்ளது. இது சிறந்த சுற்றுலா பகுதியாகும். இந்த இடத்தை பார்வையிட நேற்று கொல்லங்கோடு கிராத்தூர் பகுதியை சேர்ந்த கல்லுரி மாணவரான ஜெர்வின் (18) என்பவர் உட்பட 10 பேர் கார் மற்றும் பைக்குகளில் வந்துள்ளனர். நெடும்போக்கு என்னும் பகுதியில் இறங்கி குளிக்க தொடங்கியுள்ளனர். அது மிகவும் ஆழமான பகுதியாகும். அப்போது திடீரென ஜெர்வின் தண்ணீர் சுழலில் சிக்கி உள்ளார். உடன் வந்தவர்கள் காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அவரை காணவில்லை. இது குறித்து திருவட்டார் போலீஸ் நிலையம் மற்றும் குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ வந்து ஜெர்வினை இன்று 2-வது நாளாகவும் தேடி வருகின்றனர். ஜெர்வினின் தந்தை ஜஸ்டின் ஜெயக்குமார் ராணுவ வீரர். அவர் தற்போது விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார்.

Tags

Next Story