நாகர்கோவிலில் எஸ்.பி அலுவலகத்தில் இருக்கைகள் மக்கள் அவதி

நாகர்கோவிலில் எஸ்.பி அலுவலகத்தில் இருக்கைகள் மக்கள் அவதி
எஸ் பி அலுவலகத்தில் இருக்கைகள்
நாகர்கோவிலில் புகார் அளிக்க வருபவர்கள் அமர எஸ்.பி அலுவலகத்தில் இருக்கைகள் இல்லாததால் அவதியடைந்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பல்வேறு புகார்கள் அளிப்பதற்காக தினமும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இதுபோக வாரத்தில் புதன்கிழமை தோறும் குறைதீர்க்கும் முகாமும் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் புகார் அளிக்க வருபவர்கள் அமர போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போதிய இருக்கை வசதி இல்லாமல் இருந்தது.நுழைவு வாயில் அருகே சிமெண்டால் செய்யப் பட்ட 2 இருக்கைகள் மட்டும் இருந்தன. இதனால் பொதுமக்கள் கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை இருந்தது.

இந்த நிலையில் புகார் அளிக்க வருபவர்கள் அமர கூடுதலாக இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் அமரும் வகையில் மொத்தம் 5 இருக்கைகள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் புகார் அளிக்க வருபவர்கள் வெகுநேரம் வரை நிற்க வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டு உள்ளது என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story