இரண்டாம் நிலை காவலர் உடல் திறன் தேர்வு
ராமநாதபுரத்தில் 737 இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்கல்வி மற்றும் உடல் திறன் தேர்வு சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
ராமநாதபுரம் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் தேதி 3329 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 737 தேர்வாளர்களுக்கு இன்று இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் உடற்பகுதி தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வு நடைபெறுகிறது. ராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் துரை தலைமையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ் முன்னிலையில் உடல் திறன் தேர்வு நடைபெற்று வருகிறது. இன்று முதல் வரும் ஒன்பதாம் தேதி வரை நடைபெறும் இந்த உடற்தகுதி மற்றும் உடல் திறன் தேர்வில் உடன்திறன், மார்பளவு, உயரம், எடை உள்ளிட்டவை தேர்வு செய்யப்பட்டு பிறகு ஓட்டம், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட தகுதி தேர்வுகள் நடைபெறும் என்றும் இதில் தேர்ச்சி பெறுபவர்கள் காவலர் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்ததீஷ் தெரிவித்தார்.
Next Story