ரயில்வே ஊழியர் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான ரகசிய வாக்கெடுப்பு

ரயில்வே ஊழியர் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான ரகசிய வாக்கெடுப்பு
X

ரகசிய வாக்கெடுப்பு 

2004 ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மேலும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த ரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்தனர். போராட்டம் தொடர்பான ரகசிய வாக்கெடுப்பானது சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே உள்ள முதுநிலை பகுதி பொறியாளர் அலுவலகம் (தெற்கு) வளாகத்தில் இன்று காலை தொடங்கியது. தொடர்ந்து இன்றும் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இந்த ரகசிய வாக்கெடுப்பானது கோட்டச் செயலாளர் கோவிந்தன் ஆலோசனையில், கோட்ட செயலாளர் நெடுஞ்செழியன் முன்னிலையில் நடந்தது. இதில் கிளை தலைவர் பாஸ்கர், நிர்வாகிகள் , ராஜா, சுப்பிரமணி, நவீன் பாண்டே உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story