எஸ்டிபிஐ கட்சியின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கூட்டம்

கூட்டம் 

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட பகுதி தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.எஸ்‌.ஏ. கனி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் அன்வர்ஷா வரவேற்புரை ஆற்றினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆரிப் பாட்ஷா முன்னிலை வகித்தார்.இந்த கூட்டத்தில் நெல்லை ,பாளை,தச்சை, மேலப்பாளையம், டவுண்,பாளை ஒன்றியம், மானூர் கிழக்கு, மேற்கு, தெற்கு ஒன்றிய தலைவர் செயலாளர்கள் நாகூர் மீரான், சேக் இஸ்மாயில், பயாஸ், மைதீன் பாட்ஷா, பக்கீர், கரீம், நிஜாமுதீன், சம்சுதீன் கலந்துகொண்டனர். கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து பாகமுகவர்கள் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தல் வெற்றிக்காக அனைத்து வகையிலும் கடுமையாக உழைப்பது, அதற்காக அமைக்கப்பட்ட தேர்தல் குழுவின் பணிகளை முடுக்கிவிடுவது என தீர்மானிக்கப்பட்டது. தேர்தல் வெற்றிக்காக எவ்வாறு திட்டங்களை வகுத்து செயல்படுவது என்பது பற்றியும், கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவது குறித்தும், ஒன் பூத் ஒன் பிராஞ்ச் என்கிற கட்சியின் இலக்கை செயல்படுத்துவது . மேலும், ஜனவரி 07 அன்று மதுரையில் நடைபெறவிருக்கும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டை திட்டமிட்டபடி வெற்றிபெறச் செய்வது குறித்தும், மாநாட்டுப் பணிகள் குறித்தும் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டன. மாநாட்டுக்காக நெல்லை முழுவதும் சுவர் விளம்பரங்களை அதிகப்படுத்துவது, சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது, பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் மூலமாக மாநாட்டின் நோக்கங்களை மக்களிடம் கொண்டு சென்று, பெருந் திரளாக மக்களை திரட்டி மாநாட்டை வெற்றிபெறச் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.வரும் டிசம்பர் 6 'பாபரி மஸ்ஜித் தகர்ப்பு 31 ஆண்டு கால அநீதி' பாசிச எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழகம் தழுவிய மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் காலை 10 மணிக்கு நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன தீர்மானிக்கப்பட்டது‌.இறுதியாக மேலப்பாளையம் தெற்கு பகுதி செயலாளர் மைதீன் பாட்ஷா நன்றி உரை ஆற்றினார்.
Next Story