வேலூரில் விரைவில் செயல்பட உள்ள விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு.
வேலூரில் விரைவில் செயல்பட உள்ள விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
எத்தனை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அயவு செய்தனர்
வேலூரில் விரைவில் செயல்பட உள்ள விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு. மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் சுமார் 65 கோடி நிதி ஒதுக்கீட்டின் கீழ் வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் வேலூர் சிறிய விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது இறுதிகட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்நிலையில் விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அன்மையில் துணை பொது பாதுகாப்பு மேலாளர் விஜயகுமார். தலைமையிலான விமான நிலைய அதிகாரிகள் மற்றும் வேலூர் மாவட்ட காவல் துறையினர் வேலூர் விமான நிலையத்தில் ஆய்வு செய்தனர். இதில் விமான நிலைய பாதுகாப்பிற்க்காக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்கள் விமான நிலைய முனையம் பகுதி, பயணிகள் வருகை, புறப்பாடு பகுதி, ஓடுதளம், பாதைகள், பாதுகாப்பு கதவுகள் உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இது போன்ற சிறிய விமான நிலையங்களுக்கு மாநில காவல் துறையே பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதால் அவர்களுடனும் விமான நிலைய அதிகாரிகள் கூட்டு ஆலோசனை மேற்கொண்டனர். அதில் விமான நிலையத்திற்கு எத்தனை போலீஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
Next Story