விதை விதைப்போம், விண்ணை காப்போம்
மரங்கன்றுகள், விதைகள் வழங்கும் நிகழ்வு
மதுரை திருப்பாலை யாதவர் கல்லூரி தாவரவியல் துறைப் பேராசிரியர் முனைவர் சி. கஸ்தூரி ரெங்காமணி வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் செ. ராஜு தலைமை வகித்தார். கல்லூரிச் செயலாளர் ஆர். வி. என். கண்ணன், கல்லூரிச் சுயநிதிப் பிரிவு இயக்குனர் முனைவர் அ. இராஜகோபால் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் க.ப. நவநீதகிருஷ்ணன் முன்னாள் செயலாளர் மற்றும் தாளாளர், யாதவர் கல்லூரி, நிறுவனர், பார்க் பிளாசா குழுமம் சென்னை மற்றும் மதுரை கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்
. இந்நிகழ்வில் கருவனூர் ஊராட்சி மன்றத் தலைவர் தாமரைச்செல்வி மணிவண்ணன் மற்றும் கருவனூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பி. சீனியம்மாள், வார்டு உறுப்பினர் . சுதா கலந்துகொண்டு விதை விதைப்பது பற்றியும், மரம் வளர்ப்பது பற்றியும், அவற்றினால் பெரும் பயன்கள் பற்றியும் எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் கருவனூர் ஊராட்சி மன்றத் தலைவர் யாதவர் கல்லூரி தாவரவியல் துறை சார்பாக கிராம மக்களுக்கு, விதைகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கிச் சிறப்பித்தார். இறுதியாக இளம் அறிவியல் வேதியியல்துறை மூன்றாம் ஆண்டு மாணவி தீபிகா நன்றியுரை கூறினார். இந்நிகழ்வினை யாதவர் கல்லூரி தாவரவியல் துறைப் பேராசிரியர் முனைவர் சி.கஸ்தூரி ரெங்காமணி மற்றும் மாணவ மாணவியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.