குமரியில் தொழிலாளர்களை தேடி மருத்துவத் திட்டம் - கலெக்டர் தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் சுமார் 2000 -க்கும் மேற்பட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிற்சாலை தொழிலாளர்கள் பயன்பெற உள்ளதாக கலெக்டர் தகவல்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் சுமார் 2000 -க்கும் மேற்பட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிற்சாலை தொழிலாளர்கள் பயன்பெற உள்ளனர். இத்திட்டம் சுகாதாரத் துறை மற்றும் ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகமும் இணைந்து நடத்தி வருகின்றனர். ஊழியர்கள் மாநில காப்பீடு கழகத்தை சார்ந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்சாலைகளில் சிறப்பு முகாம்கள் சுகாதாரத் துறையுடன் சேர்ந்து நடத்துவர். இதில் தொற்றா நோய்களுக்கான முதற்கட்ட பரிசோதனை செய்யப்படும். இப்பரிசோதனைகளில் நோய் தொற்றுக்கான சந்தேகம் இருப்பின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் செயலியில் அவர்கள் முகவரி மற்றும் கைப்பேசி எண் பதிவேற்றம் செய்யப்படும். பின்னர் மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் அவர்களை சந்தித்து நோய் தொற்றை உறுதிப்படுத்தும் பரிசோதனை மேற்கொள்வர். இதுவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மூன்று சிறப்பு மருத்துவ முகங்கள் நடத்தப்பட்டு சுமார் 1000 தொழிலாளர்களுக்கு முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற தொழிற்சாலைகளில் நடைபெறும் மருத்துவ முகங்களில் அனைத்து தொழிலாளர்களும் பங்கு பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story