சீராப்பள்ளி ஸ்ரீமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

ராசிபுரம் அருகேயுள்ள சீராப்பள்ளி ஸ்ரீமகா கணபதி, ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீமகா மாரியம்மன் கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

ராசிபுரம் அருகேயுள்ள சீராப்பள்ளி ஸ்ரீமகா கணபதி, ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீமகா மாரியம்மன் கோவிலின் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று கோவிலின் கோபுர தரிசனம் செய்தனர். இக்கோவிலின் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனையடுத்து பிப்.2-ல் முகூர்த்தகால் நடப்பட்டு, கும்பாபிஷேக பணிகள், பூஜைகள் துவங்கின.

பின்னர் பிப்.10-ல் நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு, திரளான பெண்கள் ஊர்வலமாக காவேரி தீர்த்தம் எடுத்துவந்து அம்மனுக்கு அபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து யாகசாலை பூஜைகள், கோபுர கலசங்களுக்கு தானியம் நிரப்புதல் நடத்தினர். பின்னர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4-ம் யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களை எடுத்துவந்து கோவில்களின் கோபுரத்தில் வைத்து புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். புனித நீர் தெளிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story